Dec 27, 2018

Review: Makkal Nenjil M.G.R

Makkal Nenjil M.G.R Makkal Nenjil M.G.R by Tamil Virtual Academy
My rating: 4 of 5 stars

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விவரங்கள் குறைவு ஆனால் தமிழிற்காக படிக்கலாம். கலைமணி அவர்கள் ஒரு எண்ணக்கோவிலை படைத்து இருக்கிறார்

ஒரு சில வரிகள் கீழே தருகிறேன்

(1) கலையுலக மன்னாதி மன்னனாக விளங்கிய அவர், தான் நடித்த படங்களை எல்லாம் தமிழக மக்களுக்குரிய மாமல்ல புரத்து அறிவுரை ஓவியங்களாக, நீதி நெறிச் சிற்பங்களாக, வாழ்வியல் தத்துவக் கல்வெட்டுகளாக விட்டு விட்டு மறைந்தார்!

(2) சங்க காலம் முதல் இந்த இருபதாம் நூற்றாண்டு வரை, ஏழையாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, திரண்ட செல்வம் ஏந்தி, மக்களுக்காக சகல துறைகளிலும் அதை வாரி வழங்கும், ஒப்பாரும் மிக்காரு மற்ற முதலமைச்சராக வாழ்ந்த ஒரு சாதரான மனிதனை, தமிழ் இலக்கியங்களிலே மட்டுமல்ல - உலக இலக்கியங்களிலேகூட இருந்தால், உதாரணத்திற்கு காட்டுங்கள்!

(3) மன்னனா நான்? அல்லது அரச பரம்பரையா? கருவூலப் பணத்தை, நினைத்த நேரத்தில் எண்ணியபடி செலவழித்து, மண்ணுலகிலே அற்பதங்களை ஆற்றிட! எழுத்தை ஆட்சி புரிகின்ற ஓர் ஏழை நான்! என்னாலியன்ற ஓர் எண்ணக் கோயிலை, எனது சிந்தனைகளைக் கொட்டிக் குவித்துக் கண்ணீரோடு எழுதுகின்றேன்! அவ்வளவுதான்!


View all my reviews

No comments:

Post a Comment